2வது வாரமாக வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

 

ஈரோடு, பிப்.12: ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு 2வது வாரமாக நேற்றும் மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்திருந்தது. ஈரோட்டில், கருங்கல்பாளையம் காவிரி ரோடு, ஸ்டோனி பாலம் ஆகிய 2 இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் 6 டன் அளவுக்கே கடல் மீன்கள் வரத்தாகி இருந்த நிலையில், நேற்றும் 2வது வாரமாக மீன்கள் வரத்து மேலும் குறைந்து சுமார் 5 டன் அளவுக்கே வரத்தாகி இருந்தது. இதனால், கடந்த வாரத்தை விட மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்ந்து காணப்பட்டது.

இதில் வெள்ளை வாவல் மீன் அதிகபட்சமாக கிலோ ரூ.1,300க்கு விற்பனையானது. ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு: வஞ்சரம் ரூ.700 – 900, சாலமன் ரூ.800, ஊளி ரூ.350 – 500, சங்கரா ரூ.350, கடல் பாறை ரூ.500, விளாமீன் ரூ. 500, இறால் ரூ.450 – 700, கருப்பு வாவல் ரூ.800, வெள்ளை வாவல் ரூ.1300, கொடுவா – ரூ.300, நெத்திலி ரூ.300, அயிலை ரூ.250, முரல் ரூ.450, அணை மீன்களான ரோகு, கட்லா ரூ.180, பாறை ரூ.160, ஜிலேபி ரூ.130.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்