2வது அரையிறுதியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இங்கிலாந்து மோதல்

கிறைஸ்ட்சர்ச்: மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவும், 3வது இடம் பிடித்த இங்கிலாந்தும் மோதும் இப்போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6.30க்கு தொடங்குகிறது. நடப்பு தொடரின் லீக் சுற்றில்  ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோற்ற தென் ஆப்ரிக்கா, மிகுந்த தன்னம்பிக்கையுடன் அரையிறுதியை எதிர்கொள்கிறது.அதே சமயம், லீக் சுற்றின் தொடக்கத்தில் ஹாட்ரிக் தோல்வியுடன் தடுமாறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பின்னர் தொடர்ச்சியாக 4 வெற்றிகளைக் குவித்து தொடர்ந்து 5வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மொத்தத்தில் 12 உலக கோப்பைகளிலும் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி, 4 முறை கோப்பையை வென்றுள்ளது. * இரு அணிகளும் 39 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதில் இங்கிலாந்து 29-9 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.* உலக கோப்பை தொடர்களில் இதுவரை 7 முறை மோதியதில் இங்கிலாந்து 5-2 என முன்னிலை  வகிக்கிறது.* நடப்பு தொடரில்  மார்ச் 14ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது….

Related posts

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து