17ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி,  மார்ச் 14: தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சிப்பிக் கூடத்தில் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்திடலாம். இதுகுறித்த  விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரைநேரில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

Related posts

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு