165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தை ஆதரித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத் போட்டியிடுகிறார். இவரது அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஆதம்பாக்கத்தில் நேற்று நடந்தது. திமுக வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். திமுக பகுதி செயலாளர் என்.சந்திரன், தமுமுக மாவட்ட செயலாளர் பிர்தவுஸ், ஆலந்தூர் காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், மதிமுக பகுதி செயலாளர் கத்திப்பாரா சின்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தை ஆதரித்து பேசுகையில், ‘‘2016, 2021 சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு அரும்பாடுபட்டவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். அவரை வெற்றிபெற செய்வது நமது கடமை. இவர், கவுன்சிலராக பணியாற்றியபோது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். அவர் மீண்டும் வெற்றிபெற திமுக நிர்வாகிகள் சோர்வின்றி திறம்பட செயலாற்ற வேண்டும். இந்த பகுதியில் மக்கள் திட்ட பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்,’’ என்றார்.கூட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் லயன் காமராஜ், ஏழுமலை, பி.எஸ்.ராஜ், ரவிக்குமார், எஸ்.ரமேஷ், வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் நாகராஜசோழன், ஜெயக்குமார், ஜி.ரமேஷ், லியோ பிரபாகரன், ஜி.சுதாகரன், ஆர்.பாபு, சுப்புராஜ், வெங்கடேசன், சேது செந்தில், என்.எஸ்.டி.கிறிஸ்டோபர், வழக்கறிஞர் ஆனந்த் குமார், மணிகண்டன், ராஜேஷ், மதிமுக கராத்தே பாபு ஜி திருநா, விடுதலை சிறுத்தைகள் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

சொல்லிட்டாங்க…

மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிப்பு?.. தமிழ்நாடு பொறுப்பாளரும் மாற்றப்படுகிறார்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு