1000 ஆண்டு பழமையான சோளீஸ்வரர் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

பொன்னை:  பொன்னை அருகே மேல்பாடியில் 1000 ஆண்டுகள் பழமையான சோளீஸ்வரர் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மேல்பாடி கிராமத்தில் ராஜராஜ சோழன் பாட்டனார் அருட்செழிய சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோளீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்ச் மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய பகவான் மூன்று வாயிற்படியில் எழுந்தருளி சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறுகிறது.இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது சோளீஸ்வரர் சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்….

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை