100% வாக்களிக்க கோரி மகளிர் பங்கேற்ற பைக் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், ஏப். 18: 100% வாக்களிப்பை வலியுறுத்தி திருவள்ளூர் நகராட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மகளிர் பங்கேற்ற இருச்சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கி பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை, பேருந்து நிலையம், தேரடி வடக்கு ராஜவீதி வழியாக சின்ன ஈக்காடு வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது.

அப்போது, பேரணியில் வாக்களிக்க பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100% வாக்குப்பதிவு என்பது போன்ற பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர், சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜ், கலால் உதவி இயக்குநர் ரங்கராஜன், நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி, வட்டாட்சியர் செ.வாசுதேவன், நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்