100 நகரங்களில் கொண்டாட்டம்; பஜாஜ் பல்சர் மேனியா போட்டி: 25,000 போட்டியாளர்கள் பங்கேற்பு: இறுதிச்சுற்றில் 3 பேர் தேர்வாகினர்

சென்னை: பஜாஜ் பல்சர் மேனியா மாஸ்டர்ஸ் எடிஷன் போட்டியில் 25,000 பேர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் 3 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் பல்சர் மேனியா மாஸ்டர்ஸ் எடிஷனுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 100 நகரங்களில் கொண்டாட்டங்களை நடத்தியது. மொத்தம் 25,000 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான இறுதிச் சுற்று போட்டி மும்பையில் நடைபெற்றது.பல்சர் வாகன ஆளுமை உட்பட பல்வேறு சவால்களை போட்டியாளர்கள் எதிர்கொண்டனர். சிறந்த போட்டியாளர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

இறுதிச் சுற்றில் முதல் இடத்தை முகமது நூமன், இரண்டாவது இடத்தை ஜீத் சிங் மற்றும் 3வது இடத்தை இனியவன் ரவிச்சந்திரன் ஆகியோர் பிடித்தனர். மேலும், நிகழ்ச்சியில் முன்னணி கலைஞர்கள் பங்கேற்ற சிக்னேச்சர் பல்சர்மேனியா ஸ்டண்ட் காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்தன. இது குறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள் வர்த்தகப் பிரிவு தலைவர் சாரங்க் கனடே கூறுகையில், ‘‘கடந்த 21 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்சர்மேனியாக்களின் அணுகுமுறை மற்றும் நேசத்துடன் அதனை பின் தொடர்பவர்களுக்கான வலுவான குழுவை உருவாக்கியுள்ளோம். பல்சர்மேனியா மாஸ்டர் எடிஷன் போட்டி மட்டுமல்ல, பல்சர் உணர்வுளுக்கான முழுமையான கொண்டாட்டமாகும்’’ என்றார்.

Related posts

வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்