 தையல் நாயகி அலங்காரத்தில் ஊட்டி மாரியம்மன் வீதி உலா

ஊட்டி,ஏப்.14: ஊட்டி மாரியம்மன் நேற்று ஸ்ரீ தையல் நாயகி அலங்காரத்தில், காளை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஒரு மாத காலம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, நாள்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் இந்த வீதி உலா நடத்தப்படுகிறது. இந்நிலையில், இம்முறை கடந்த மாதம் 15ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 18ம் ேததி முதல் அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்திலும்,அலங்காரத்தில் வீதிஉலா அழைத்து வருகின்றனர்.நேற்று சுராசி மராட்டியர் சங்கம் சார்பில் நடந்தது. இதனை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் ஸ்ரீ தையல் நாயகி அம்மன் அலங்காரத்தில், காளை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இந்த தேர்பவனி மாரியம்மன் கோயிலில் துவங்கி கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு