₹22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், மார்ச் 2: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கு ஆடு, கோழிகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவளும், விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் 270க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகள் 5,200 முதல் ₹9,500 வரை விற்பனையானது. மொத்தம் ₹22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்