₹17 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர், ஜன.23: அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வaந்தனர். நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 132 விவசாயிகள் 640 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹6,466 முதல் ₹7,396 வரையும், டிசிஎச் பருத்தி ₹8,000 முதல் ₹8,866 வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ₹17 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி