ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி கொலை: போலீசார் விசாரணை

 

ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.3: ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள கழிப்பறை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரிமுத்துவை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர், முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை