ஷாங்காய் மாநாட்டில் சிரமத்திற்கு உள்ளான பாக். பிரதமர் ஷெரிப்!: இயர் – போனை காதில் பொருத்த முடியாமல் தவிப்பு..குறுநகை செய்த புதின்..!!

உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின் போது இயர்-போனை காதில் பொருத்த முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் பெறும் சிரமத்திற்குள்ளானார். பாகிஸ்தானுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு இயர்போனை தன்னுடைய காதுகளில் பொறுத்த முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் தவித்தார். எனக்கு யாராவது உதவி செய்ய முடியுமா என அருகில் இருந்த பாதுகாவலரை அழைத்தார். இதனை பார்த்துக்கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறுநகையுடன் அமர்ந்திருந்தார். இந்த சந்திப்பின் போது பாகிஸ்தானுக்கு எரிவாயு தர சம்மதம் தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். குழாய் வழியாகவே எரிவாயு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்துவிட்டதாகவும் புதின் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டால் எரிவாயு கொண்டு செல்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். …

Related posts

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி