வேளாண் வணிகத்துறை இயக்குநர் உழவர்சந்தைகளில் நேரில் ஆய்வு

 

விருதுநகர், நவ.24: விருதுநகர், சாத்தூர் உழவர் சந்தைகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் செயல்பாடுகள் குறித்து வேளாண் வணிகத்துறையின் இயக்குநர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் விற்பனைக்குழுவின் ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படுத்தப்படும் மின்னணு வேளாண்சந்தை இ.நாம் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து திட்ட செயல்பாடுகள், விற்பனை குழுவின் செயல்பாடுகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மின்னணு வேளாண்சந்தை திட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முறையாக தரம்பிரித்திடவும், விளைபொருள் வரத்தை அதிகரிக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தினார். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மின்னணு வேளாண் சந்தை, உழவர் சந்தை, உழவர் உற்பத்திக்குழு செயல்படுகள் குறித்தும், வேளாண்மை உட்கட்டமைப்பு, நிதி செயல்பாடு உள்ளிட்ட வேளாண்மை திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும், முன்னேற்றம் குறித்தும் வேளாண் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது