வேளாண் அலுவலகத்தில் ஆய்வு பெண் அதிகாரியை தாக்கிய தற்காலிக ஊழியர்

கோவில்பட்டி, பிப். 7: கோவில்பட்டியில் வேளாண் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்த பெண் அதிகாரியை தற்காலிக ஊழியர் தாக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி வேளாண் துறை உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் மனோரஞ்சிதம். நேற்று இவர், கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்திற்கு ஆய்வுக்காக வந்தார். அப்போது அங்கு தற்காலிக மேலாளராக பணியாற்றும் தனபாலகன் என்பவருக்கும், அவருக்கும் இடையே அலுவலக பணி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தனபாலகன், அதிகாரி மனோரஞ்சிதத்தை தாக்கினார். காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுதொடர்பாக மனோரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்