வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரம்

 

சென்னை, ஏப்.7: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் நேற்று மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை எல்லையம்மன் கோயில் தெருவில் வீடு, வீடாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இரவு 8 மணியளவில் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட காந்தி ரோட்டில் தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் வேட்பாளர் ஜெயவர்தன் பேசியதாவது:

நான், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது 2005ம் ஆண்டிலிருந்து நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையால் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் நிலுவையில் இருந்தது. அதை முடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் வாயிலாக அந்த நிலம் கையகப்படுத்துகிற பிரச்னையை முடிவு கொண்டு வந்தேன். அதை தொடர்ந்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்