வேம்பார் பகுதியில் ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹2.5 லட்சம் பறிமுதல்

விளாத்திகுளம், ஏப். 6: வேம்பார் பகுதியில் ஆவணமின்றி கொண்டு சென்ற ₹2.5 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கூட்டுறவு துறை முதுநிலை ஆய்வாளர் சுடலைமணி தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வேம்பார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹2 லட்சத்து 50 ஆயிரத்து 180 கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவர், தூத்துக்குடி விஎம்எஸ் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு