வேப்பூர் வட்டார சுகாதார பேரவை கூட்டம்

 

குன்னம், அக்.13: தமிழக அரசின் வட்டார சுகாதார பேரவை கூட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா தலைமையில், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது. வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சேசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாசன், ஒன்றியகுழு துணை தலைவர் செல்வராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், வேப்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளரகள், மற்றும் பிற துறை அலுவலர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டெங்கு மற்றும் கிராம சுகாதார அடிப்படை வசதிகள் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்