வேதாரண்யம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் உலக ஒலிம்பிக் தினம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த, அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஒலிம்பிக் படத்திற்கு வண்ணந்தீட்டினர், ஒலிம்பிக் பாடல் பாடினர், ஒலிம்பிக் வரலாற்றை தெரிந்து கொண்டனர். விளையாட்டுக்களின் பெயர்களை பட்டியலிட்டனர். ஒலிம்பிக்கில் இடம்பெறும் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடினர். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்