வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

 

வேதாரண்யம், ஏப்.13: வேதாரண்யம் நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு. தமிழக அரசு உத்தரவு படியும் நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தஞ்சாவூர், நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆலோசனையின் பேரில் வேதாரண்யம் நகராட்சி பகுதி மக்களுக்கு நகராட்சி ஆணையர்அப்துல் ஹாரிஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது வேதாரண்யம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் ஒஆர்எஸ் கலந்து குடிநீர் அல்லது வீட்டு முறை பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் பகல் நேரங்களில் அதிக அளவு தேவையான குடிநீர் குடிக்க வேண்டும். மெலிதான காட்டன் உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். மிகுந்த அவசியமென்றால் குடையுடன் செல்ல வேண்டும். வெயில் தாக்கத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு தேவையான முதல் உதவி வழங்க வேண்டும்.

பாதிப்படைந்தவரை நிழலில் அமர வைத்து குளிர்ந்த துணியால் அடிக்கடி துடைத்து இயல்பான வெப்பநிலை உள்ள தண்ணீரை தலையில் அடிக்கடி தெளித்து முடிந்தவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். பின்பு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான மருத்துவ உதவி தர வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

 

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை