வேடசந்தூர் மாரம்பாடி சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிப்பு

வேடசந்தூர், ஜூலை 4: வேடசந்தூரில் ஏராளமான கோழி, ஆடு இறைச்சி கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மீதமாகும் இறைச்சி கழிவுகளை, கடை உரிமையாளர்கள் மாரம்பாடி பகுதியிலுள்ள குப்பை கிடங்கின் அருகே சாலையிலே கொட்டி விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனை உண்ணும் நாய்கள் வெறி பிடித்து ஆடு, மாடுகளை கடிப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து நேற்று இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் கோழியின் தலை கால்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு அம்பேத்கர் சிலையிலிருந்து கோஷமிட்டவாரு வேடசந்தூர் சாலை தெருவில் உள்ள பேரூராட்சி அலுவலகம் வரை நடந்து சென்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ‘பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை ரோட்டில் கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடசந்தூர் பகுதி முழுவதும் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். உடன் மாநில பொது செயலாளர் மணிகண்டன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மோகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்