வேடசந்தூர் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

வேடசந்தூர், மார்ச் 27: நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரநால் ரோடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் பணம் கொண்டு சென்றவர் திருச்சி மாவட்டம் கருமண்டபம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி