வெள்ளியாவிளை புனித அலோசியஸ் பள்ளி 6 வது ஆண்டு விழா

கருங்கல், பிப்.28: கருங்கல் அருகே வெள்ளியாவிளை புனித அலோசியஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6ம் ஆண்டு விழா நடைபெற்றது. ஒளிரும் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, மாவட்ட கல்வி அலுவலர் முருகன் (மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள்), மாத்திரவிளை வட்டார முதல்வர் அருட்பணி மரிய வின்சென்ட் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ஆரோக்கிய விமலா வரவேற்றார். பரதநாட்டியம், கிராமிய கலைகள், மேற்கத்திய நடனம், கணினி, ஓவியம், இசை,யோகா, தற்காப்பு கலைகள்,கைவினை பொருட்கள் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சியிலும் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள், பதக்கங்களை, சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி பாராட்டினர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு