வெயிலுகந்தபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு

கழுகுமலை, நவ. 8: கயத்தார் மேற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வெயிலுகந்தபுரத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் போடுசாமி, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் கல்லூரணி மகேந்திரராஜ், குமரட்டையாபுரம் சின்னச்சாமி, சங்கரலிங்கபுரம் செல்வராஜ் மற்றும் கோபி, வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முசிறி, தொட்டியத்தில் நியாய விலை கடையில் குறைதீர் முகாம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து நகை திருட்டு