வெம்பக்கோட்டை அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

ஏழாயிரம்பண்ணை, ஜூலை 20: வெம்பக்கோட்டை அருகே பீரோவை உடைத்து, 18 பவுன் நகை மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி(30). இவர் குண்டாயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது மனைவியும் நேற்று முன்தினம் மாமானார் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து கருப்பசாமி வெம்பக்கோட்டை காவல் துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்