வெம்பக்கோட்டை அருகே பாலம் -சாலை இணைப்பில் பயமுறுத்தும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே, பேர்நாயக்கன்பட்டி- தெற்கு ஆனைக்குட்டம் சாலையில் பாலம் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பேர்நாயக்கன்பட்டி-தெற்கு ஆனைக்குட்டம் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 3.5 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. ரூ.2.19 கோடியில் போடப்பட்டஇந்த சாலையில், 5 ஆண்டு பராமரிப்பு செலவை ஒப்பந்ததாரார்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சாலை போடப்பட்டு மூன்று ஆண்டுகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக பேர்நாயக்கன்பட்டியில் இருந்து தெற்கு ஆனைக்குட்டம் செல்லும்போது சாலையில் உள்ள முதல் பாலம் அருகில் ரோட்டில் பெரும்பள்ளமாக ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகள் இந்த சாலையில் அதிகமாக உள்ளன. தினமும் ஏராளமான வாகனங்கள் இநத் ரோட்டில் சென்று வருகின்றன. சாலை அமைக்கும்போது பணிகள் தரமாக நடைபெறாததால் ரோடு கற்களாக தெரிகிறது. மேலும், மழையால் சாலையில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டு கிராமங்களை இணைக்கும் விதமாக ஒன்றிய நிதியில் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், சாலை போடப்பட்ட ஓராண்டிலேேய பல இடங்களில் மழையால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமானால் ரோடு மிகவும் மோசமாக சேதமடையும் வாய்ப்பு உள்ளது. சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. ஆனால், சாலை சேதமைடந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். எனவே, சாலை பராமரிப்பு பணிகளை முறையாக அரசு அறிவித்தபடி மேற்கொள்ளவும், சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு