வெம்பக்கோட்டை அருகே கிராவல் மண் தட்டுப்பாடு காரணமாக மறுவாழ்வு முகாம் கட்டிட பணி தாமதம்

ஏழாயிரம்பண்ணை, ஜன.3: வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் கண்டியாபுரம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டிட பணிகள் கிராவல் மணல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் கண்டியாபுரம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு துலுக்கன்குறிச்சியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் 352 வீடுகள் ரூ.18.94 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ஒரு பயனாளிக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மாதம் 18, 19 தேதிகளில் பெய்த அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர்நிலையானது நிரம்பி வழிகிறது. இதனால் கட்டிட பணிகளுக்கு தேவையான கிராவல் உள்ளிட்டவை கிடைப்பதில் பெறும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் துலக்கன்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுவரும் கட்டிடங்கள் பேஸ்மட்டம் அமைத்ததோடு, கிராவல் மணல் கிடைக்காததால் பணிகளானது தாமதமாக நடைபெற்று வருகிறது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு