வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.6: கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகேயுள்ள பாலசந்திரன் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த ஈரோட்டைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். பின்னர், அங்கிருந்த கிருஷ்ணகிரி பாறையூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (50), ஆந்திர மாநிலம் உருலோப்பனப்பள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்