வீட்டின் பூட்டை உடைத்து 4.5 பவுன், பணம் திருட்டு

ஓசூர், ஏப்.18: ஓசூர் பெத்த எலசகிரியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி ராதம்மா (68). இவர் கடந்த 5ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். கடந்த 15ம் தேதி, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராதம்மாவிற்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது, வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த நான்கரை பவுன் தங்க நகை மற்றும் ₹1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுபற்றி அவர் நல்லூர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி

போர்வெல் மோட்டாரில் வயர் திருட்டு

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு