வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

தேன்கனிக்கோட்டை, ஏப்.6: தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டி பகுதியில் வசித்து வருபவர் திருப்பதி மகன் ராமசாமி(28). இவர் கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, சொந்த கிராமமான அரசஜ்ஜூர் சென்றிருந்தார். அங்கிருந்து 4ம் தேதி வீடு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6.5 பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் மாயமாகியிருப்பதை கண்டு ராமசாமி திடுக்கிட்டார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாதேசை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு