விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்

 

அரியலூர், ஜூலை 21: விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜூலை-2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் சங்கமம்-2023 நிகழ்ச்சி ஜூலை 27, 28 மற்றும் 29ம் தேதிகளில்திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் விவசாயிகள் அதில் கலந்துகொள்ள ஏதுவாக ஜூலை மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்