விழுப்புரம் மாவட்டத்தில் 6 சிறப்பு எஸ்ஐக்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம்

விழுப்புரம், செப். 26: விழுப்புரம் மாவட்டத்தில் 6 சிறப்பு எஸ்ஐக்கள் உள்ளிட்ட 44 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்.பி. சஷாங்சாய் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரங்கநல்லூர் சிறப்பு எஸ்ஐ ரமேஷ் பிரம்மதேசத்துக்கும், ஒலக்கூர் சிறப்பு எஸ்ஐ பாஸ்கரன் மயிலத்துக்கும், அவலூர்பேட்டை சிறப்பு ரமேஷ் கோட்டக்குப்பத்துக்கும் அங்கிருந்த செந்தமிழ்ச்செல்வன் ஒலக்கூருக்கும், இதேபோல் தலைமை காவலர்கள் கண்டாச்சிபுரம் விஜி திண்டிவனத்துக்கும், விக்கிரவாண்டி முருகன் வெள்ளமடைபேட்டைக்கும், அனந்தபுரம் ஏழுமலை மரக்காணத்துக்கும், செந்தில்குமார் ரோஷணைக்கும், ஒலக்கூர் சந்திரசேகர் செஞ்சிக்கும், இதேபோல் மாவட்டம் முழுவதும் 44 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்.பி. சஷாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்