விளாத்திகுளம் பகுதியில் மரக்கன்று நடும் பணி

விளாத்திகுளம், அக். 4: விளாத்திகுளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளாத்திகுளம் தொகுதி முழுவதும் 1 கோடி மரக்கன்று நட்டு பசுமையான தொகுதியாக மற்றும் முயற்சியாக விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையிலான வேம்பு, புங்கை, புளியமரம், அத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் – வேம்பார் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் ஏற்கனவே நடப்பட்டுள்ள மரக்கன்றுகளின் வளர்ச்சி ஆகியவற்றை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குநர் ராகவன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, திமுக விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, யூனியன் கவுன்சிலர் சுமதி இமானுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்