விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் தேர்தல் அலுவலம் திறப்பு

மார்த்தாண்டம், ஏப். 4: விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் டாக்டர் தாரகை கத்பர்ட் போட்டியிடுகிறார். இதையடுத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுவதிலும் பொது மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

அலுவலகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வேட்பாளர் தாரகை கத்பர்ட், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸ் , மாவட்ட பொதுச் செயலாளர்கள் வக்கீல் பால் மணி, அருள்ராஜ், மற்றும் நிர்வாகிகள் சுரேஷ் , டாக்டர் தம்பி விஜய குமார், ரவிசங்கர், ஜோசப் தயாசிங், டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்