விருத்தாசலத்தில் பரபரப்பு குவாட்டர் பாட்டிலில் பல்லி?

விருத்தாசலம், மே 23: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமம் டாஸ்மாக் கடையில், சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராம்கி, ரூ. 130 மதிப்புள்ள குவார்ட்டர் மது பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது குவார்ட்டர் பாட்டிலில் பல்லி போன்ற பொருள், செத்து மிதப்பதாக கூறி டாஸ்மாக் ஊழியர்களிடம் தகராறு செய்தார். பாட்டிலில் கிடக்கும் பல்லியை வெளியே எடுத்து காண்பிக்குமாறு விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் பாட்டிலை கொடுக்குமாறு கூறியும், அவர் கொடுக்கவில்லையென கூறப்படுகிறது. வேண்டுமானால் பட்டிலை கொடுத்துவிட்டு வேறு ஒன்றை வாங்கிச்செல்லுமாறு கூறியும், அவர் கேட்கவில்லை. இத்தகவலால் மதுப்பிரியர்கள், கடை முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, பாட்டிலில் கிடந்தது பல்லி அல்ல, வேறு ஏதேனும் இலை போன்று கிடந்துள்ளது. சந்தேகமடைந்த விற்பனையாளர்களும் பாட்டிலில் கிடக்கும் பல்லியை எடுத்து காண்பிக்குமாறு கூறியும், அவர் காண்பிக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு