விபத்தில் மூளைச்சாவு அடைந்த லாரி டிரைவரின் கல்லீரல் சிறுநீரகங்கள் தானம்

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சமயபுரம் சோழன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(47). திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காய மண்டியில் லாரி டிரைவராக பணியில் இருந்த இவர், கடந்த 1ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பழூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து செல்வராஜின் உறுப்புகளை தானம் செய்தவதாக குடும்பத்தினர் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதில் எடுக்கப்படும் உடல் உறுப்புகள் எவ்வித தடையின்றி மதுரை செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் கூறி ஏற்பாடு செய்தார்.இதையடுத்து நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடந்த ஆபரேஷனில் முதலில் எடுக்கப்பட்ட செல்வராஜின் கல்லீரல் மருத்துவ பெட்டியில் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைதொடர்ந்து 2 சிறுநீரகங்கள் (கிட்னி) எடுக்கப்பட்டு ஒரு சிறுநீரகம் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒரு நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.ஒன்றரை மணி நேரத்தில் மதுரை…திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ்சுக்கு முன்பு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. 12.20 மணிக்கு புறப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் வாகனம் மதியம் 1.50 மணிக்கு மதுரை அப்போலோ மருத்துவமனை சென்றடைந்தது….

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை