விடுதலைப்போராட்ட வீரர்: ஒண்டிவீரன் அஞ்சல் தலை கவர்னர்கள் வெளியீடு

நெல்லை: விடுதலைப் போராட்ட வீரர்  ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா, பாளை. கேடிசி நகரில் நேற்று  நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலங்கானா கவர்னர் தமிழிசை ஆகியோர் ஒண்டிவீரன் அஞ்சல் தலையை வெளியிட,  முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோவிந்தராஜ், ஒண்டிவீரன் வாரிசு ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக் கொண்டார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழகத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவை வளர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் உயர் கல்வி பயின்றவர்கள் 28 சதவீதம் என்ற போதிலும், தமிழகத்தில் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்றார். விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பேசினர்.  முன்னதாக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ வரவேற்றார். மாமன்னர் ஒண்டிவீரன் தேசிய பேரவை பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்….

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி