விக்கிரவாண்டி அருகே சோகம் பைக் மீது கார் மோதி 2 பேர் பரிதாப பலி

விக்கிரவாண்டி, ஆக. 1: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலம் ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மதியழகன் (60). இவரது உறவினர் ரத்தினம் மகன் தண்டபாணி(55). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் விக்கிரவாண்டி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அன்று இரவு புதுவை நோக்கி திருக்கனூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். குச்சிபாளையம் அருகில் வந்த போது எதிரே அதிவேகமாக வந்த மதுராபாக்கத்தை சேர்ந்த காரின் முன் டயர் வெடித்து எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதி விபத்துகுள்ளானது.

இதில் பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த மதியழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தண்டபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த தண்டபாணி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்