வாழ்வில் மகத்தான செழிப்பை வழங்கட்டும் முதல்வர் ரங்கசாமி ஓணம் வாழ்த்து

 

புதுச்சேரி, ஆக. 28: ஓணம் பண்டிகையையொட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: அறுவடை திருவிழாவாக மலையாள மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் ஆகும். மதம், இனம், மொழி கடந்து பலதரப்பட்ட மக்களை சகோதர, சகோதரிகளாக ஒன்றிணைப்பது மற்றும் ஒருவருக்கொருவர் அன்பையும். மரியாதையையும் பரிமாறிக் கொள்வது போன்ற பாரம்பரிய இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை, தெய்வீக அம்சம் அதன் இருப்பை எல்லா இடங்களிலும் நிலைநிறுத்தி இருப்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியான தருணத்தில், நிலவிளக்கின் ஒளியும், பூக்களின் இனிமையான நறுமணமும் நம் வீடுகளை நிரப்பட்டும். அனைவரது வாழ்விலும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகத்தான செழிப்பை வழங்குவதாக அமையட்டும். அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related posts

குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம்

குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம்

வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி