வார இறுதி நாட்களையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 420 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம், பிப். 29: வார இறுதி நாட்களையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 420 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வார இறுதியில் 1, 2ம் தேதி அன்று பொதுமக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 1ம் தேதி 180 சிறப்பு பேருந்துகளும், 2ம் தேதி 240 என மொத்தம் 420 சிறப்பு பேருந்தகள் இந்த வழிதடத்தில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் https://www.tnstc.in.home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திகொள்ளலாம். பயணிகள் கூட்டம் குறையும்வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை