வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.1.40 லட்சத்தில் டெஸ்க், பெஞ்சுகள்

 

அஞ்சுகிராமம், மார்ச் 24: அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரியூர் அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 450 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ மாணவிகள் போதிய இருக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர் அலெக்ஸாண்டர் சாம்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோரின் தீவிர முயற்சியால் நாகர்கோவில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் ரூ. 1. 40 லட்சம் மதிப்பிலான 20 டெஸ்க்குகள் மற்றும் 20 பெஞ்சுகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் சாம்ராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன், ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவன நிதிநிலை மேலாளர் ஜமீல், மற்றும் ராபின், மனு, ரிஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜோஸ் ஆலுக்காஸ் மேலாளர் ஜென்சன் கலந்து கொண்டு 20 டெஸ்க்கள் 20 பெஞ்சுகளை பள்ளிக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது