வாயலூர் ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருக்கழுக்குன்றம்:  வாயலூர் ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு வந்த  மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சி காரைத்திட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி உள்ளது. இங்கு, கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி  திறக்கப்பட்டது. இதில், பள்ளிக்கு வருகை தந்த  மாணவர்களை பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் கிங் உசேன், வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா மதன், தலைமையாசிரியர் பவானி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். வாயலூர் மேல் நிலைப்பள்ளி பெற்றோர் –  ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி  துணை தலைவர் ராஜேந்திரன், பெற்றோர் – ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன், அலை தொண்டு நிறுவன நிர்வாகி செரீனா மற்றும் சமூக ஆர்வலர்கள் லோகு, காமராஜர், கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும்,  மாணவ – மாணவிகளுக்கு  நோட்டு புத்தகம்  வழங்கப்பட்டது.    அதேப்போல், வாயலூர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் மாணவ – மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு,  வாயலூர் மேல் நிலைப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் அருணகிரிநாதர் மற்றும் முக்கியஸ்தர்கள் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.    …

Related posts

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு