வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு

வாடிப்பட்டி, ஏப் 14: மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பேரூராட்சி இயக்குனர் உத்தரவின் பேரில், மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் ஆலோசனையின்படி கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தணிக்க நீர் மோர் தண்ணீர் பந்தல்கள் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பாக திறக்பட்டுள்ளது, வாடிப்பட்டி பேருந்து நிலையம் அண்ணா சிலை மற்றும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் என இரண்டு இடங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன. வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது என்று பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு