வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 28: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை, பாத்திமா நகர் உள்ளிட்ட 32 வாக்கு சாவடிகளில், கடந்த தேர்தல்களில் ஓட்டு சதவீதம் குறைவாக பதிவானது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தி உத்தரவின்படி, டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தென்கரைக்கோட்டை பாத்திமா நகர் சமுதாய கூடத்தில் 264, 265 ஆகிய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பொதுமக்களிடையே, வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்களிக்காததால் ஏற்படும் தீமைகள் குறித்து அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்