வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

திருவள்ளூர்: மாவட்டத்தில் 315 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 830 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பபட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் 51 வாக்குச்சாவடி மையங்களுக்கு 51 கட்டுப்பாட்டு கருவிகள், 51 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கூடுதலாக ஒதுக்கீடு 20 சதவீதம் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 62 கட்டுப்பாட்டு கருவிகள், 62 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதேபோல், ஆவடி மாநகராட்சி, திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகள், திருமழிசை, ஆரணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, நாரவாரிக்குப்பம், மீஞ்சூர், பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சி அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்றது….

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்