வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்.15:மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மயிலாடுதுறை, சீர்காழி,பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம்,கும்பகோணம்,ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அளவிலான பிரிவு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட கலெக்டர்,மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 1743 வாக்குச்சாவடிகள், உள்ளன.

வாக்குச்சாவடிகளில் குடிநீர்,கழிவறை, மின்சாரம், சாய்தள வசதிகள்,ஆகியவைகள் வாக்குசாவடிகளில் முறையாக உள்ளனவா என்பதை மண்டல அலுவலர்கள்,பிரிவு அலுவலர்கள், ஆய்வு செய்து அனைத்து வாக்குசாவடிகளிலும், அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டில் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு