வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

 

மேட்டுப்பாளையம், மார்ச் 25: நேற்று மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கோவை மாவட்ட வழங்கல் அலுவலரும், மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரன் தலைமையில் ஊட்டி சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் கல்பனா முன்னிலையில் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பயிற்சியின்போது மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இயந்திரங்கள் பழுதானால் அதை சீர் செய்வது எப்படி இயக்குவது ? என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் 1500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு காலை, மாலை என இரு பிரிவுகளாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி