வாகனம் மோதி தொழிலாளி பலி

அய்யலூர், ஏப். 5: அய்யலூர் அருகேயுள்ள கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மார்ச் 31ம் தேதி சித்துவார்பட்டி பிரிவு அருகேயுள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தம்பி சத்தியமூர்த்தி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ அங்கமுத்து, விபத்தை ஏற்படுத்திய எஸ்கே.புதூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்