வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 3 உணவகங்களுக்கு அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  கொரோனா  வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாத உணவகங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, கடந்த 19ம்தேதி  155 உணவகங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்போது, 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு முறையான வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் 8 உணவகங்களில், உடல்நலத்திறகு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம், பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்