வலங்கைமான் கடைவீதியில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து

வலங்கைமான்: வலங்கைமான் கடைவீதியில் இரவு நேரங்களில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர்கள் எந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும், இந்த பகுதிக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வந்து செல்ல வேண்டும். நெரிசல் மிகுந்த இந்த கடை பகுதியில் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் கால்நடைகளின் கூட்டத்தால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் அதிகளவில் மாடுகள் படுத்து தூங்குகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதும் நடக்கிறது. இந்த மாடுகளால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகம் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்….

Related posts

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் வழங்க வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் காணாமல் போனதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

மன்னார்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது: குண்டர் சட்டம் பாயும் என எஸ்பி எச்சரிக்கை