வரும் 26, மே 7ம் தேதி பொது தேர்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் கர்நாடக தொழிலாளர்களுக்கு விடுமுறை தொழிலாளர் நலத்துறை உத்தரவு

விழுப்புரம், ஏப். 23: கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அந்த மாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடக மாநிலத்தில் வரும் 26ம் தேதி மற்றும் மே 7ம் தேதி இரண்டு கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் அரசால் அந்த மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இந்த தினத்தில் அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணிபுரியும் கர்நாடக மாநில தொழிலாளர்கள் தேர்தல் நடைபெறும் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம், என கூறப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்